ரஸ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் பதில் நடவடிக்கை.

ரஷ்யா இரசாயன ஆயுதங்களை உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளமை அமெரிக்காவிற்கும் அதன் சகாக்களுக்கும் கடும் கவலையை அளித்துள்ளது.

பிரசல்சில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் மூடியகதவுகளிற்குள் ஆராயப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கருத்துவெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அதுபோன்றதொரு பதிலடி கொடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
எதனை பயன்படுத்துகின்றார்களே அதுவே பதில் நடவடிக்கையை தீர்மானிக்கும் எனபைடன் தெரிவித்துள்ளார்.

ஆகவே அமெரிக்காவின் பதில் நடவடிக்கை எவ்வாறானதாக காணப்படலாம்
அமெரிக்க ஜனாதிபதியுடன் போலந்திற்கு சென்ற செய்தியாளர்களுடன் விமானத்தில் வைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் உரையாடியுள்ளார்.

ரஸ்யாவின் நடவடிக்கையை அடிப்படையாக வைத்து நாங்கள் எங்கள் சகாக்களுடன் இணைந்து நடவடிக்கைளை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு எந்த சூழ்நிலையிலும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் எண்ணமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புட்டின் உக்ரைன் மீது இரசாயன தாக்குதலை மேற்கொண்டால் எவ்வாறான பதில் நடவடிக்கை எடு;க்கப்படும் என்பது குறித்து அமெரிக்காவும் அதன் சகாக்களும் வேண்டுமென்றே தெளிவற்ற பதிலை வழங்கிவருகின்றனர்.

பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை ரஸ்யா பயன்படுத்தினால் ரஸ்யா கடும் விளைவை சந்திக்கநேரிடும் என தெரிவிக்கும்அமெரிக்காவும் சகாக்களும் இதனை தெளிவாக கிரெம்ளினிற்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.