பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன..? நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மாநிங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச சந்தையை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டாலும் தொடர்ந்து அதிகரிக்கும் விலை சாமான்ய மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக பெட்ரோல் விலை 7 நாள்களில் லிட்டருக்கு ..4 ரூபாய் 85 காசுகளும் , டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 85 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

5 மாநில தேர்தல்களையொட்டி கடந்த நவம்பர் மாதம் 4 – ஆம் தேதி முதல் 137 நாள்களுக்கு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் விலை உயர்த்தப்படாத அந்த காலத்தில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலர்கள் வரை விலை அதிகரித்தது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்காமல் தற்போது படிப்படியாக விலை ஏற்றத்தை திணிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. மேலும்,ரஷ்யா-உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், தற்போதுதான் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது முற்றிலும் உண்மையல்ல. கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்வு காணப்படுகிறது. சர்வதேச விலைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.