படகு விபத்தில் காணாமல்போன கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்பு.

யாழ்., காரைநகர் கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் மோதியதில் காணாமல்போன கடற்படைச் சிப்பாய் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

காரைநகர் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகை நேற்று விரட்டிய வேளை விபத்துக்குள்ளான படகில் இருந்து 4 கடற்படையினர் கடலில் தவறி வீழ்ந்தபோது ஒருவர் காணாமல்போயிருந்தார்.

இவ்வாறு காணாமல்போன கடற்படைச் சிப்பாயைத் தேடும் பணி தொடர்ந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் காங்கேசன்துறை கடற்படைத் தளம் ஊடாக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.