பீஸ்ட் முழு திரை விமர்சனம்.! ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா வாங்க பார்க்கலாம்.?

தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தன்னுடைய 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் நெல்சன் டிலிப்குமர் அவர்கள் இதற்கு முன் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகாரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது படம் எப்படி இருக்கிறது  வாங்க பார்க்கலாம்.

தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் வீரராகவனாக நடித்துள்ளார் காஷ்மீர் எல்லையில் பல நாட்களாக பதுங்கியிருக்கும் முக்கிய பிரபலத்தை சிறை பிடிப்பதற்காக பலத்த திட்டம் தீட்டுகிறார் ஆனால் அந்த திட்டத்தை கைவிடும்படி ஆதரவு வருகிறது ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காமல் அதையும் மீறி அங்குள்ள தீவிரவாதிகளை தும்சம் செய்கிறார் விஜய்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கு நெருக்கமான குழந்தை ஒன்று திடீரென இறந்து விடுகிறது இதனால் உடனடியாக விஜய் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறார் சென்னைக்கு வந்து பூஜாவுடன் காதலில் விழுகிறார். பூஜாவுடன் சுற்றிவரும் விஜய்  வேலை சம்பந்தமாக ஒரு மாலுக்கு செல்கிறார்கள். ஆனால் அந்த மாலை தீவிரவாதிகள் பலரும் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் வீரராகவன் கைது செய்த முக்கிய புள்ளியை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதுதான் தீவிரவாதிகளின் கோரிக்கை. அந்த தீவிரவாதிகளை எப்படி துவம்சம் செய்கிறார்அந்த முக்கிய புள்ளியை விடுவிக்கிறார் களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் விஜய் ஒன் மேன் ஆர்மியாக படத்தை தூக்கி நிறுத்துகிறார். விஜய்யின் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு உற்சாகம்தான் அதேபோல் விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது அதேபோல் ஆக்ஷன் காட்சிகள் டான்ஸ் என ஒட்டுமொத்த படத்தையும் தனியாளாக தூக்கி நிறுத்துகிறார் விஜய். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வீரராகவன் ஆக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார்.

அதேபோல் இந்த படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே செல்வராகவன் விடிவி கணேஷ் என அனைவரும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்தார்கள்.  அதேபோல் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோருக்கு படத்தில் பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகளிலும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அதன் பிறகு படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்த திரைப்படத்தில் வில்லன்களை மிகவும் வீக்காக காட்டியுள்ளார்கள்  தீவிரவாதி என்றால் மிரட்டலாக இருப்பார்கள் ஆனால் அப்படி எதுவும் இல்லை . அதுமட்டுமில்லாமல் விஜய் போடும் திட்டங்களை பார்க்கும்பொழுது  விறுவிறுப்பு இல்லாமல் போகிறது. படத்தில் முதல் பாதி நெல்சன் ஸ்டைலில் இருந்தாலும் இரண்டாவது பாதி பயங்கர சலிப்பு தட்டுகிறது.

நெல்சன் இதற்கு முன் இயக்கிய கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய திரைப்படங்களை நன்றாக இயக்கி விட்டு விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் ரசிகர்களை வைத்து சோதனை செய்துள்ளார் என்றுதான் கூற வேண்டும் அதேபோல் அனிருத் இசை சொல்லவே வேண்டாம் பாடல்கள் பட்டையைக் கிளப்பி விட்டது. படத்தில் கிளைமாக்ஸ் காட்சி சண்டையில் சவுண்ட் எஃபெக்ட் பிரமாதம். மேலும் அன்பறிவு ஸ்டாண்ட் ஓகே.

என்னதான் பீஸ்ட் திரைப்படம்  இதற்கு முன் உள்ள திரைப்படங்களில் இருந்து வேறு மாறாக இருந்தாலும் பெரிய அளவில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்யவில்லை என்பதே உண்மை. ஆனாலும் படம் முழுக்க விஜய் தன்னுடைய சிறந்த நடிப்பாலும் ஸ்டைளாலும் ஆக்சன் காட்சிகலாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

பீஸ்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதிர்பார்த்த அளவிற்கு  பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூறவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.