சுயாதீன எம்.பிக்கள் சபாநாயகருடன் இன்று முக்கிய சந்திப்பு.

அரசிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றில் ஆசனங்களின் ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் இதன்போது சபாநாயகருக்கு யோசனை முன்வைக்கவுள்ளது எனக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தற்போது நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்வது தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ணவுடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் ஏனைய கட்சிகளைபி பிரதிநிதித்துவப்படுத்தி இன்றைய சந்திப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.