ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரம் மற்றொரு உக்ரைனாகும் சூழ்நிலை இருக்கிறதா?

Hypersonic Long Range Missiles என்ற நீண்டதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை எப்படி வேறுபடுகிறது என்று பார்ப்போம். இந்த புதிய, மிக வேகமான hypersonic long range missiles என்ற ஏவுகணைகள், ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு அதிகமான வேகத்தில் ஊடுருவி செல்லக்கூடியவை என்றும் 2000 கி. மீட்டர்களுக்கு அதிகமான தூரம் பயணிக்கக்கூடியவை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ஏவுகணைகள் நிலத்திலிருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் என்றபோதிலும், ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பிலிருந்து மட்டுமல்லாது, ஜெட் ரக போர்விமானங்களிலும் போர்க்கப்பல்களிலும் பொருத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

எதிர்காலத்தில் மனித உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் பசிபிக் பிராந்தியத்தில் உருவானால் அல்லது போர் வெடித்தால், AUKUS அமைப்பு இதனை முறியடிக்க ஆயத்தமாக, தயாராக இருப்பதே இந்த அதி நவீன ரக ஏவுகணை தயாரிப்பின் நோக்கம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பசிபிக் பிராந்தியத்தில் சீனா தற்போது செல்வாக்கு செலுத்த எடுத்துவரும் முயற்சிகளை கருத்தில்கொண்டே இந்த ஏவுகணைகளை ஆஸ்திரேலியா தயாரிப்பது தொடர்பான இணக்கப்பாட்டை மூன்று நாடுகளும் இணைந்து எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ரஷ்யாவின் ஊடுருவல் காரணமாக உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைமைகளவிட மிகமோசமான நிலைமை இப்பிராந்தியத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று விடுக்கப்பட்டுவரும் எச்சரிக்கைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

தாய்வானை தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துவரும் நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது இந்த தசாப்தத்தின் இறுதிகளில் பசிபிக் பிராந்தியத்தில் ‘சீனாவுடன் தவிர்க்க முடியாத இராணுவ பலப்பரீட்சை ஒன்றில் ஈடுபடவேண்டிய கட்டாயம் உருவாகும் என்பதால் இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருப்பதாக’ Australian Strategic Policy Institute ஐச்சேர்ந்த Senior Analyst , Malcolm Davies கூறுகிறார்.

‘முக்கியமாக, டார்வின் நகரம் மற்றும் அதன் வெளியிலுள்ள பகுதிகள் எதிரிகளால் தாக்கப்படும் அபாயம் நிறையவே இருப்பதாகவும்’ அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளைவிட மிக மோசமான பாதிப்புகளை நாம் சந்திக்கவேண்டி ஏற்படும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய தருணமிது’ என்றும் அவர் கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.