பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலரை மே 18 ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.