நடிகர் விமலிடம் பணமோசடி செய்த புகார்.

கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விமல், ரூ. 5 கோடி மோசடி செய்துவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலனை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் அவருடைய நண்பர்கள் கோபி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகர் விமல் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்கார வேலனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நடிகர் விமலிடம் பண மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நடிகர் விமலுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்பட மாட்டேன் என்ற அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும், மனுவை ஏற்று நடிகர் விமல் சமாதானமாக செல்வதாக மனுத்தாக்கல் செய்ததாலும், தயாரிப்பாளர் சிங்காரவேலன் வாக்குறுதியாக மனுவில் அளித்ததை நிபந்தனைகளாக மாற்றி கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.