வெற்றிலைக்கேணியில் புதைக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தரின் சடலம்!

யாழ்., வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளது எனச் சந்தேகத்தின் பெயரில் குறித்த இடத்தை மருதங்கேணி பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று குறித்த இடத்தைத் தோண்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவித்தன.

இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தக் கொலை குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற பெயரில் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.