இலங்கையை மீட்டெடுப்பதற்கு வெளிநாடுகள் உதவவேண்டும் : ரணில் கோரிக்கை

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க வெளிநாடுகள் உதவ வேண்டும் என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் இன்று பிரதமர் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோர் தனித்தனியாக அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டின் நிலைமை மோசமடைவதற்கு முன்னர் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றுள்ளேன். வெளிநாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கவேண்டும்; இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றும் இதன்போது ரணில் மேலும் குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.