2024 வரை தேர்தல் இல்லை; கோட்டா – ரணில் அரசு திட்டம் பொருளாதார மீளெழுச்சிக்கே முன்னுரிமை.

இலங்கையில் 2024ஆம் ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க கோட்டாபய – ரணில் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வருடம் முழுவதுமாக பொருளாதார மீளெழுச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளை வலுவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் சிலவற்றுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

முதல் விஜயமாக இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.