BULLET பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகர் லிவிங்ஸ்டன் மகள்….

1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர்லிவிங்ஸ்டன்.

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.

இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கலாக புகைப்படங்களை பதிவிட்டும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டும் அசத்தி வருகிறார்.இவருக்கென இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அண்மையில் தி வாரியார் படத்தில் இருந்து வெளியாகிய புல்லட் பாடல் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

இந்த பாடலுக்கு முரட்டு நடனம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.