விரட்டி விரட்டி வெளுத்து வாங்கிய மனைவி (Video)

இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் ராஜஸ்தானில், மனைவியின் சித்ரவதையில் இருந்து காப்பாற்றும்படி தஞ்சம் அடைந்த பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பாதுகாப்பு வழங்கும்படி அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

.ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிவாடி நகரில் வசிப்பவர் அஜித் சிங் யாதவ். அரசாங்க பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் ஹரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்த சுமன் என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லவில்லை. கடும் கோபம் அடையும் சுபாவம் கொண்ட சுமன், சிறிய விஷயத்துக்கெல்லாம் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து, கணவரை சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

அஜித் சிங் பலமுறை இரத்தக்காயத்துடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். கணவரை அடிக்கும்போது வீட்டுக் கதவை உட்புறமாக பூட்டிக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றி வந்தார், சுமன். பூரிக்கட்டை, கரண்டி, கிரிக்கெட் மட்டை என, கையில் கிடைப்பதைக் கொண்டு கணவனை அடித்து துவைத்துள்ளார். கையில் எதுவும் கிடைக்காத நேரங்களில் தலையை சுவற்றில் மோத வைப்பதும் உண்டு. எட்டி உதைப்பது சர்வ சாதாரணமாக நடக்கும். காதல் மனைவி என்பதால் இந்த சித்ரவதையை அஜித் தாங்கிக் கொண்டார்.

ஆனால் மனைவியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. சமாளிக்க முடியாத நிலையில், பொலிஸில் பல முறை புகார் செய்துஉள்ளார். குடும்ப சண்டை என பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொலிஸில் புகார் கொடுத்ததற்காகவும் அஜித்தை பலமுறை பின்னி எடுத்துள்ளார், சுமன்.

இதையடுத்து, வீடு முழுதும் மனைவிக்கு தெரியாமல் ரகசிய கேமராக்களை பொருத்தினார். மனைவியின் சித்ரவதைகள் அனைத்தையும் பதிவு செய்தார். அந்த ‘வீடியோ’ ஆதாரத்துடன் நீதிபதியிடம் தஞ்சம் அடைந்தார். வீடியோ காட்சிகளை பார்த்த நீதிபதி மிரண்டே போய் விட்டார். இதையடுத்து, அஜித் முறைப்படி வீடியோ ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும், அஜித்துக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.

மனைவியிடம் அஜித் அடிவாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அஜித் சிங் யாதவ் கூறியதாவது:-

நான் தலைமை ஆசிரியர் என்பதால் அதன் கண்ணியத்தை காப்பாற்ற மனைவியின் சித்ரவதையை பொறுத்துக் கொண்டேன். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அவள் அதை தாண்டி விட்டதால் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தேன். எத்தனை கொடுமைகள் செய்தாலும் ஒரு நாள் கூட அவளை நான் அடித்ததில்லை.இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.