காஷ்மீரில் டிக்டாக் நடிகை சுட்டுக்கொலை.

காஷ்மீரில் டிக்டாக் பிரபலம், அம்ரீன் பட் ,35 என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல டிக்டாக் பிரபலம் மற்றும் டி.வி. நடிகை அம்ரீன் பட், 35 நேற்று இரவு தனது வீட்டில் இருந்த போது , பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். உடனிருந்த பர்கான் ஜூபைர் என்பவர் காயமடைந்தார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் இந்த கொலை சம்பவத்தினை அரங்கேற்றியுள்ளனர் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் வீடு புகுந்து பொலிஸ்காரரை சுட்டுக்கொன்றனர்.. இதில் 7 வயது மகள் காயமுற்றார். இச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.