இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இரத்ததான நிகழ்வு.

கேகாலை பிரதான வைத்தியாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க மாவனல்லை தும்புலுவாவலையில் இரத்ததான முகாம். இடம்பெற்றது.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தும்புலுவாவக் கிளையின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு தும்புலுவாவ ரியோ ரிசப்சன் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம் ரிஸ்மி தனது 20 வது தடவையாக இரத்த தானம் வழங்கி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கேகாலை வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பிரதான வைத்திய அதிகாரி, பிரதான பொது சுகாதார பரிசோதகர் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உதவி செயலாளர் மௌலவி எம். எஸ்.எம். தாசிம், அகில இலங்கை இரத்த வங்கி சங்கத்தின் தலைவர் சாம ஸ்ரீ தேசகீர்த்தி எம்.எச். எம்.முஸம்மில் மாவனல்லை பதூரியா கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.