நாடாளுமன்றில் உணவுக்கு மட்டும் வருடாந்தம் 12 கோடி ரூபா செலவு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களது உணவு மற்றும் சிற்றுண்டி செலவு, குடிதண்ணீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றுக்காக வருடாந்தம் 35 கோடி ரூபா வரை செலவிடப்படுகின்றது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணவு, சிற்றுண்டி வகைகளுக்காக வருடாந்தம் 12 கோடி ரூபாய் செலவிடப்படுகின்றது.

அதேபோல் நாடாளுமன்றத்தில் குடிதண்ணீருக்காக வருடாந்தம் 90 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்காக வருடாந்தம் 8 கோடி ரூபாவும், தொலைபேசிக்காக 14 கோடி ரூபாவும் செலவிடப்படுகின்றது என நாடாளுமன்ற நிதிப் பிரிவு தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.