விமலின் மனைவிக்குப் பிணை.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்குக் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துக்குப் பொய்யான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை, அதனை உடன் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் முன்வைத்துள்ள மேன்முறையீட்டு கோரிக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மேன்முறையீட்டுக் கோரிக்கையைப் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதிவான், சஷி வீரவன்சவை இவ்வாறு பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.