பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அறுவை சிகிச்சை.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சைனஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது தனது இல்லத்தில் போரிஸ் ஜான்சன் ஓய்வெடுத்து வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று லண்டனில் உள்ள அரசு நிதி அளிக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் பிரதமர் பொறுப்பை துணை பிரதமர் பொறுப்பை டோமினிக் ராப் கவனித்துக்கொண்டார்.

58-வயது ஆகும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற அறுவை சிகிச்சை கொரோனாவுடன் தொடர்பு உடையது இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு வார இறுதியில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளார். இந்த மாத இறுதியில் ஜி 7 நாடுகள் கூட்டத்திலும் நேட்டோ உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.