ஜோர்டானில் துறைமுகத்தில் விபத்து; 12 பேர் உயிரிழப்பு.

ஜோர்டான் நாட்டின் அகுவாபா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல் ஒன்றில் கிரேன் ஒன்றின் உதவியுடன் பெரிய அளவிலான உருளை ஒன்று இறக்கப்பட்டு உள்ளது.

இதில், திடீரென அந்த உருளை கிரேனில் இருந்து நழுவி கப்பலில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியில் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து, துறைமுக பணியாளர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடினர். துறைமுகத்திற்கு அருகே உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். குடியிருப்பில் வசித்தவர்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் முதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு 10 ஆக உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு அந்நாட்டு பிரதமர் பீஷர் கசாவ்னே மற்றும் உள்துறை மந்திரி மஜென் அல்-பராயா ஆகியோர் சென்றுள்ளனர். விஷவாயு கசிந்த உருளை கீழே விழுந்த சம்பவத்தில் 234 பேர் காயமடைந்து உள்ளனர் என குடிமக்கள் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஆமர் அல்-சர்டாவி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.