கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதி தாக்கப்பட்டு சாவு : பாதுகாப்பு அரணை உடைத்துக் கொண்டு வெளியேறிய கைதிகள் (Video)

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு முகாம் நிர்வாகிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படும் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இராணுவத்தினருக்கும் கைதிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கைதானவரின் சடலத்தை பொலிஸாரிடமோ அல்லது இராணுவத்தினரிடமோ ஒப்படைக்காமல் ஊடகச் செய்திக்காக வரும்வரை கைதிகளால் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கொலை எனவும் நீதி தேவை எனவும் இவ்வாறான முகாமில் மீண்டும் இவ்வாறான கொலைகள் இடம்பெறக் கூடாது எனவும் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

முகாமின் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு சிலர் வெளியே வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் காரணமாக இன்று (29) காலை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் துங்காவில பாலத்திற்கு அருகில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.