இந்திய ஒரு நாள் அணி அறிவிப்பு .

ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட போட்டியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு- செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி ‘டிரா’வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் மட்டத்தில் கொரோனா ஊடுருவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர். இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் தான் தற்போது நடக்க உள்ளது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியுடனான 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:-
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கி.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர பட்ஹால், ஜே. , பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 1ம் தேதி) துவங்க உள்ளது. அதன்பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.