நீச்சல் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் வைபவம்.

Kilinochchi Acquatic Sports Association – KASA ( கிளிநொச்சி நீர் விளையாட்டு சங்கம்) மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியினை கிரமமாக வழங்கி வருகின்றது.

கிளிநொச்சியில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு சங்கத்தின் தலைவர் Dr. M. தவராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் கிளிநொச்சி அரசாங்க அதிபர், விளையாட்டு அமைச்சின் வடமாகாண இணைப்பாளர், இலங்கை Life Guard Association இன் தலைவர் மற்றும் Kilinochchi Acquatic Sports Association உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கேடயம் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வருடம் 600 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.