கந்தக்காடு கலவரம்: 4 படையினர் கைது!

பொலனறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை -கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இராணுத்தினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கலவரத்தில் கொழும்பு – மோதரையைச் சேர்ந்த 36 வயதுடைய கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், 726 பேர் தப்பியோடியிருந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், 667 கைதிகள் மீளவும் கைதுசெய்யப்பட்டதுடன், 59 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.