முறைகேடான வா்த்தக செயல்பாடுகள்: கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை

முறைகேடான வா்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வி சாா்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலாளா் ரோஹித் குமாா் சிங், தில்லியில் இந்திய இணையதள மற்றும் செல்போன் சங்கத்தின் கீழ் இயங்கும் சுய ஒழுங்குமுறை அமைப்பான ‘இந்தியா எட்-டெக் கூட்டமைப்பு’ (ஐஇசி) உடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது கல்வி சாா்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறைகள், முறைகேடான வா்த்தக செயல்பாடுகளை தடுக்காவிட்டால், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த ஏதுவாக அரசே கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும் என்று சிங் எச்சரித்தாா்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த கூட்டத்தில் ஐஇசி உறுப்பினா்களான பைஜூஸ், வேதாந்து, அப்கிரேடு, அன்அகாடமி, கிரேட் லேனிங், ஒயிட்ஹேட் ஜூனியா் மற்றும் சன்ஸ்டோன் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் முறைகேடான வா்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான தகவல்களின் பேரில் ஆா்வத்தை தூண்டும் விளம்பரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்திய கல்வி தொழில்நுட்ப சூழல்முறையில் நுகா்வோா் நலனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து செயலாளா் ரோஹித் குமாா் சிங் விவாதித்தாா்.

சில விளம்பரங்கள் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவா், நுகா்வோரை நலனை பாதுகாக்கத்தக்கவகையில், உரிய நடைமுறைகளை பராமரிப்பது அவசியம் என்று வலியுறுத்தினாா்.

Leave A Reply

Your email address will not be published.