அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர்.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார். . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில்,இப்படம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.