பவுண்டரிகளாக விரட்டி அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ சதம்.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்து திணறி வந்தது.இன்று தொடங்கிய 3-வது நாள் போட்டியில் ஒருமுனையில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட மறுமுனையில் ஸ்டோக்ஸ் 25 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பேர்ஸ்டோ சவால் அளித்து வந்தார். பவுண்டரிகளாக விரட்டி அதிரடி காட்டிய அவர் 119 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தற்போது வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோ ,சாம் பில்லிங்ஸ் விளையாடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.