தமிழகத்தில் மேலும் 2,654 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,654 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐ கடந்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,85,429 ஆக அதிகரித்துள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 15,616 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,542 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 1,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் 375 பேருக்கும், கோயம்புத்தூரில் 144 பேருக்கும், திருவள்ளூரில் 135 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.