ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட ஹிருணிகா விடுதலை! (Video)

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட  போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 9 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப் போகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கிருந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அந்தப் பகுதியில்  பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

அங்கு ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டபோது பொலிஸார் அவர்களை நோக்கி நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தினர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவியது.

பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலால் அந்தப் பகுதியில் வீதியில் செல்லும் வாகனங்களில் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலையான பிறகு, அவர் ஒரு சிறப்பு அறிக்கையை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிந்திய இணைப்பு :-

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப் போகுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கிருந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி அந்தப் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டபோது பொலிஸார் அவர்களை நோக்கி நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தினர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவியது.

பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலால் அந்தப் பகுதியில் வீதியில் செல்லும் வாகனங்களில் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

கைதுசெய்யப்பட்ட ஹிருணிகா உள்ளிட்ட 11 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திர குழுவினர் கைதுசெய்யப்பட்டதும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடனடியாக அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க முன்வந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சட்டத்தரணிகளுடன் நேரடியாகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தேவையான சட்ட உதவிகளை மேற்கொண்டனர்.


Leave A Reply

Your email address will not be published.