முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி 7ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது.

மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவுடன், தீபக் ஹூடாவிற்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஸ் கான் மற்றும் ஹர்சல் பட்டேலிற்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது.

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல்.

Leave A Reply

Your email address will not be published.