‘காஸ்’ விலை மேலும் 50 ரூபாவால் உயர்வு.

‘லிட்ரோ’ சமையல் எரிவாயு விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ சிலிண்டர் ஒன்றின் விலை 4 ஆயிரத்து 910 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்த நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அளவுக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதைத் தடுக்கும் வகையில் வீட்டு மின்சாரப் பட்டியல் அடிப்படையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.