ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில் – தேநீரில் விஷம் கொடுத்ததாக சந்தேகம்?

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சக்திவாய்ந்த நச்சு உட்கொண்டமையால் அவரது உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (20) ரஷ்ய நகரமான டோஸ்ம்கிலிருந்து மாஸ்கோவிற்கு பறந்து கொண்டிருந்தபோது நோய்வாய்ப்பட்டார். அவரை ஏற்றிச் சென்ற விமானம் ஓம்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் விசம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அவரது உதவியாளர்கள் கூறுகிறார்கள். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு விமான நிலைய உணவகத்தில் நவல்னி ஒரு கப் தேநீர் குடித்துக்கொண்டிருந்தார், அந்த தேனீர் கோப்பையில் விசம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கோமா நிலையில் இருக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரை சிகிச்சைக்காக அழைத்து வர ஜெர்மன் விமான ஆம்புலன்ஸ் சைபீரியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நவல்னிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழு அவரது உடல்நிலை ஜெர்மனிக்கு விமானத்தில் கொண்டு செல்லக் கூடிய நிலையில் இல்லை என்று கருதுகிறது. அது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே, ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு சிகிச்சையளிக்க தயாராகி வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கடுமையான எதிர்ப்பாளராகக் கருதப்படும் நவால்னின் நிலைக்கு, புடினின் மேல் விரலை சுட்டிக்காட்டுகிறார்கள்.

புடின் நிர்வாகத்தின் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடுமையாக பேசிய நவால்னி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஆண்டு போலீஸ் காவலில் இருந்தபோதும் அவருக்கு விஷம் குடிக்க வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

Leave A Reply

Your email address will not be published.