இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி வாட்ச் 3.

ரியல்மி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி வாட்ச் 3 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரிய அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டதாகும். இதன் அளவு 1.8 இன்ச் ஆகும். சதுர வடிவிலான டிஸ்ப்ளே உள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் கர்வுடு எட்ஜ்களை கொண்டுள்ளன.

அதிகபட்சம் 500 நிட்ஸ் பிரைட்னஸும் இதில் வழங்கப்படுகிறது. இது 67.5 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலான ரியல்மி வாட்ச் 2-வை விட இது 35 சதவீதம் அதிகமாகும். இதில் பிரத்யேகமாக 100 வாட்ச் பேஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரியல்மி லிங்க் ஆப்பை பயன்படுத்தி அதை மாற்றிக்கொள்ளலாம். 14 கிராம் எடை கொண்ட ஸ்கின் ஃபிரெண்ட்லி சிலிகான் ஸ்ட்ராப்பையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது.

இதுதவிர வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃபுக்கான IP68 தரச் சான்றும் பெற்றுள்ளது. ப்ளூடூத் காலிங் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் 340 எம்.ஏ.ஹெச் பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்திக்கொள்ள முடியுமாம்.

கிரே மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்சில் விலை ரூ.3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 2-ந் தேதி விற்பனைக்கு வர உள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுக சலுகையாக ரூ.2 ஆயிரத்து 999-க்கு பெற முடியும். ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.