எதிர்கால தேர்தல்களில் ஐதேகவும் மொட்டும் இணைந்து போட்டியிட முடிவு

எதிர்வரும் தேர்தலில் யானையும் மொட்டுவும் இணைந்து போட்டியிடும் என ஐ.தே.க பிரதிநிதிகளுக்கு ரணில் அறிவித்தல்! அடுத்த முறை மண்டபம் நிரம்பி ஆட்களை அழைத்து வரச் சொல்லுங்கள்!

எதிர்வரும் தேர்தலில் மொட்டுவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்று கண்டிக்கு விஜயம் செய்ததுடன், ஜனாதிபதி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த சுமார் 600 வேட்பாளர்களும், தற்போதைய மாநகர சபை உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆனால் அழைக்கப்பட்டவர்களில் 20 பேர் மாத்திரமே பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டம் நடைபெற்ற மண்டபம் வெறுமையாக காணப்பட்டதுடன், இந்த நிகழ்வில் இது தொடர்பாக ஏற்பாட்டாளர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

மேலும், ஜனாதிபதி மீண்டும் கண்டிக்கு வரவுள்ளதாகவும், அதன்போது, ​​உள்ளூராட்சி அமைப்பாளர்கள், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் மற்றும் தமிழ் கட்சி பிரதிநிதிகளை ஒன்று திரட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கண்டி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினைச் சேர்ந்த மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (30) இரவு சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.