‘மொட்டு’வின் ஆதரவின்றி எந்தவொரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவின்றி, எந்தவொரு அரசாலும் ஆட்சி செய்ய முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சியாக எமது கட்சி காணப்படுகின்றது. இந்தநிலையில், எதிர்க்காலத்தில் நாட்டில் சர்வகட்சி அரசு அமையுமானால் அதில், எமது கட்சி நிச்சயமாகப் பங்காளியாகச் செயற்படும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத்தான் இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் உள்ளது. எமது கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு அரசாலும் ஆட்சி செய்ய முடியாது.

இந்தநிலையில், எதிர்க்காலத்தில் எவ்வாறான அரசு அமையப்போகின்றது என்பதைப் பார்த்து, நாம் ஜனாதிபதிடன் பேச்சு நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.