அரச அலுவலகங்களுக்கு வெள்ளி விடுமுறை இனிமேல் இல்லை!

அரச அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அண்மைய நாட்களில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெள்ளிக்கிழமையை அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து பொது நிர்வாக அமைச்சால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

எனினும், தற்போது, பொதுப்போக்குவரத்துப் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருகின்றது.

போக்குவரத்திலிருந்து விலகியிருந்த 800 பஸ்களை இலங்கை போக்குவரத்துச் சபை மீளச் சேவையில் இணைத்துள்ளது.

அத்துடன், வெற்றிகரமான முறையில் கியூ.ஆர். முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படுகின்றது.

எனவே, இந்த விடயங்களைக் கருத்தில்கொண்டு, பொது நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்துச் செய்யுமாறு, பொது நிர்வாக அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.