வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான பெண் மரணம்!

ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார்.

நேற்று (01) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 வயதுடைய நபர் ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் பெண். இவர் தனது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.