ஸ்காட்லாந்து இன்ஸ்டாகிராம் ஆர்வலரது பாஸ்போர்ட் குடிவரவு அதிகாரிகளால் பறிமுதல் (வீடியோ)

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கெய்லி ஃப்ரேசர், “கோ ஹோம் கோட்டா” போராட்டத்தை விமர்சித்ததைத் தொடர்ந்து அவரது கடவுச்சீட்டைக் கைப்பற்றிய இலங்கை குடிவரவு அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தனது கடவுச்சீட்டு இலங்கை குடிவரவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் ‘Kayzfraser’ என்ற பெயரில் ஸ்காட்லாந்து இன்ஸ்டாகிராம் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வசிக்கும் இளம் ஸ்காட்லாந்து பிரஜை ‘கோட்டா கோ கம’ போராட்டங்களை நெருக்கமாகப் பின்தொடர்ந்ததோடு அவரது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ளடக்கத்தை தீவிரமாகப் பகிர்ந்து கொண்டார் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.


அவரது இன்ஸ்டாகிராம் கணக்குப் பதிவின்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்று, அவரை மிரட்ட முயற்சித்து, பின்னர் அவரது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்துள்ளனர்.

குடிவரவு அதிகாரிகளுடனான உரையாடலின் போது, ​​​​அவர்கள் ஏன் தனது பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் எனக் கேட்ட போது , அவர் விசா விதிகளை மீறியிருக்கிறாளா என்று விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அத்தோடு அவர்களது சம்பாசனையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக என இலங்கை வர வீசா எடுத்திருப்பதாகவும் , அப்படி வந்த ஒருவர் போராட்ட நிகழ்வுகளை இன்டர்கிராமில் பதிவேற்றியது தவறு என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி இலங்கை குடிவரவு அதிகாரிகளிடமிருந்து நேற்று அழைப்பு வந்துள்ளதாக பிரேசர் தற்போது தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.