புதிய நாடாளுமன்ற அமர்வில் 30 பேர் அளவு இடம் மாற தீர்மானம்?

புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த ஏறக்குறைய முப்பது உறுப்பினர்கள் தாங்கள் இருக்கும் ஆசனங்களை மாற்றுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சியில் இருந்து ஒரு குழுவினர் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுமுள்ளனர்.

தற்போது எதிர்க்கட்சியில் இருந்து பல சிறு கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ள நிலையில், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக தீர்மானித்து அரசாங்கத்தில் இணைவதற்கு தயாராகி வருகின்றனர்.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) குழுவொன்று உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சியில் இணையவுள்ளதோடு, புதிய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.