தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- டூ படித்த விடுதி மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மை நிலை தெரிய வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி பள்ளி முன்பு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பள்ளியை சூறையாடியதோடு அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி உயிரிழந்த மர்மம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும் கலவரத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்த சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிபி சிஐடி போலீசார் பள்ளியில் பதிவாகி இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர்ந்து பல கோணங்களில் ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாணவியின் இறப்பு குறித்து விசாரணைக்காக கைதாகி சிறையில் இருந்த ஆசிரியைகள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் கஸ்டடி எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது பள்ளி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததில் கடந்த 13-ம் தேதி மாடியில் இருந்து விழுந்து சுயநினைவின்றி கிடந்த மாணவியை பள்ளி காவலர் உள்ளிட்ட 3 ஆசிரியைகள் சேர்ந்து தூக்கி வரும் சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.