அரகல போராட்டகாரரான டென்னிஷ் அலிக்கு 14 நாட்கள் சிறை தண்டனை.

சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டென்னிஷ் அலி என்ற அரகல போராட்ட செயற்பாட்டாளருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளரும் , கட்டுப்பாட்டு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சந்தேகநபர் கடந்த 27ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைத்தொலைபேசியுடன் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, சட்டவிரோதமான தடைசெய்யப்பட்ட பொருளான கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், இன்று (4) சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலதிக மாவட்ட நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு செல்போன்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.