போக வேண்டாம் என்று விழுந்து கும்பிட மட்டுமே இல்லை ‘..- மைத்திரி.

பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் அவர்களில் 5 பேர் அமைச்சுப் பதவிகளுக்காக சென்றதாக அக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இருவர் அமைச்சர்களாக பதவியை பெற்றதாகவும் , எஞ்சியவர்கள் ரணில் விக்ரமசிங்க காலத்தில் பதவியை பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும், ‘நான் கட்சியை விட்டு சென்றோரிடம் விழுந்து கும்பிடாத குறையாக, செல்ல வேண்டாம் என்று சொன்னேன்’ என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியின் பயிற்சி நிகழ்வுக்காக , கட்சியின் தலைமையகத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.