அரச வங்கி ஒன்றில் 6 கோடி ரூபா நிதி மோசடி: பெண் அதிகாரி சிக்கினார்.

அரச வங்கி ஒன்றில் இருந்து 6 கோடி ரூபாவை மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரியான பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடவத்தை அரச வங்கியில் 48 போலி கடன் ஆவணங்களை சமர்ப்பித்து 68,340,000 ரூபா நிதியை இவ்வாறு மோசடி செய்துகொண்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு அரச வங்கிக்குச் சொந்தமான 48 தனியார் கடன் கோப்புகள் மூலம் தவறான தகவல்களை அளித்து இந்தப் பணத் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்பதுடன் குறித்த நபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் குறித்த அரச வங்கியின் உள்ளகக் கணக்காய்வு அதிகாரி எனவும், அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரான பெண் அதே வங்கியில் உதவி பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.