ரணிலுடன் மனோ, விக்கி, ஹக்கீம், ரிஷாத் தனித்தனியே பேச்சு!

சர்வகட்சி வேலைத்திட்டம் மற்றும் சர்வகட்சி அரசை நிறுவுதல் தொடர்பில் பல கட்சிகள் இன்று தனித்தனியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிங் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளும் இன்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனும் இன்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.

இன்று ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.