தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், டி20 தொடரை 2-1 என தென்னாப்பிரிக்க அணி வென்றது.

ஜூலை 31ம் தேதியுடன் டி20 தொடர் முடிந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 17 (நாளை) தான் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸில் தொடங்குகிறது. டி20 தொடர் முடிந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

முதல் டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணியில், ஜாக் க்ராவ்லி, அலெக்ஸ் லீஸ், ஆலி போப், ரூட், பேர்ஸ்டோ, ஃபோக்ஸ், பிராட், ஆண்டர்சன் என வழக்கமான டெஸ்ட் வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்கள் ஆண்டர்சன் – பிராட் இணைந்து ஆடுகின்றனர். இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 71.43 சதவிகிதத்துடன் தென்னாப்பிரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. எனவே முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா களமிறங்குவதால் கண்டிப்பாக வெற்றிக்காக போராடும். அதேவேளையில், இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது எளிதான காரியமும் அல்ல.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:
ஜாக் க்ராவ்லி, அலெக்ஸ் லீஸ், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், மேத்யூ பாட்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Leave A Reply

Your email address will not be published.