சீன ஆய்வுக் கப்பல் வருகையால் பாக்கு நீரிணையில் இந்தியக் கப்பல்கள்.

இலங்கையில் சீன ஆய்வுக் கப்பல் மற்றும் பாகிஸ்தான் கப்பல்களின் வருகையையடுத்து பாக் நீரிணையில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சீனவின் யுவாங்-05 கப்பல் வருகை தந்ததையடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலையில் இந்தியா தனது பங்கிற்கு பாக் நீரிணை பகுதியில் இந்திய கடற்படையின் அதிநவீன கப்பல் மூலம் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்தியாவின் கடும் எதிா்ப்பையும் மீறி இலங்கைக்கு சீன கப்பல் வந்துள்ளது. இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இலங்கைக்கு மிகவும் அருகே தமிழக கடற்கரையோரம் கூடங்குளம் அனுமின் நிலையம், ராமேசுவரம் தீவு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளமை தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது.

இதனால் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீன கப்பல் மூலம் 750 கிலோ மீட்டா் வரையில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படும் சூழலில் இதனைத் தடுக்கும் வகையில் இராமேஸ்வரத்தில் பாக் நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் கரையோரக் காவல்படையின் ஹோவா் கிராப்ட் கப்பல் ஆகியவை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கையினை மையமாக்கொண்டு ஓர் பூகோள அரசியல் போட்டி நிலவியதனைத் தாண்டி தறபோது பூகோள பனிப்போர் மூழும் சூழலும் ஏறபடுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.