வடக்கின் அதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம்.

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட நிர்வாக அதிகாரிகள் சிலருக்கு இடமாற்ற உத்தரவு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள திணைக்களங்கள், அமைச்சுக்களில் பணியாற்றிய அதிகாரிகளிற்கே இடமாற்ற உத்தரவு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போதைய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் நிரஞ்சன் கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக பதவி வகித்த நந்தகோபன் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளராகவும், தேவநந்தினி பாபு கூட்டுறவு ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளராக பிரணவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இடமாற்றப்பட்ட 4 அதிகாரிகளினது இடமாற்றமும் எதிர் வரும் 24ஆம திகதி முதல் அமுலாகும் வகையில் செயல்படுத்தப்படும் ஆளுநர எழுத்தில் வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.