புதிய அமைச்சரவையில் இடம்பெற இருப்போர் பட்டியல் கசிந்தது

அடுத்த வாரம் நியமிக்கப்படும் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவோரின் பட்டியல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

அதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, தம்மிக்க பெரேரா, எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சமகி ஜன பலவேகவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு சிரேஷ்ட பிரமுகர்களும் இந்த ஆவணத்தில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மனோ கணேசன், ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சரவையில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.