மலையேறச் சென்ற பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சறுக்கி விழுந்து மரணம்!

மாவனல்லை உத்துவன்கந்த மலையில் ஏறுவதற்கு பேராதனை பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் குழுவுடன் சென்ற பீடத்தின் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் தற்காலிக உதவி விரிவுரையாளர் , சரதியேல் பாறையில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (21) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டிய, மகுல் மடுவ பகுதியைச் சேர்ந்த விரஸ்மி கொடிதுவக்கு என்ற 27 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் விவசாய பீடத்தின் 2014 தொகுதி உறுப்பினராக உள்ளார்.

விவசாய பீட மாணவர்கள் உட்பட 59 எக்ஸ்புளோரா கிளப் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் காலை 8.00 மணியளவில் உத்துவம்கந்த மலையில் ஏறுவதற்காக பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டது.

அவரது உடல் மாவனல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.