கோட்டா கொடுக்காத 400 மிலியனை ரணில், மகிந்தவுக்கு கொடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை சீர்செய்வதற்காக 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீடு மாத்திரமன்றி அதனை அண்டிய பகுதியையும் சுவீகரித்து புதிய வீட்டுத் தொகுதியை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுவரை புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள மற்றுமொரு உத்தியோகபூர்வ இல்லத்தில் திரு.மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தினர் தங்கியிருப்பதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இந்த அமைச்சரவைப் பத்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்திலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்து அதனை நிறைவேற்றாமல் இருக்க முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    இப்படி இருந்தால் நாட்டை எப்படி முன்னேற்றுவது இந்தத் திருட்டுப் பயல்கள் தான் முன்னேறுவார்கள் இவங்கள் எல்லோரையும் நடு ரோட்டில் வைத்துக் கல்லால் அடிக்க வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.