ரணிலின் சர்வகட்சி அரசாங்கம் வீண்!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்திய போதிலும் அவை அனைத்தும் இதுவரை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட போதும் அதற்கான சரியான வேலைத்திட்டம் இதுவரை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படாமையே இதற்கு காரணம் என அறியப்படுகிறது.

இது தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருடன் கலந்துரையாடிய போது, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே அரசாங்க அமைச்சர்களை எடுக்காமல் பாராளுமன்ற குழு அமைப்பு மூலம் , அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும் என சுட்டிக்காட்டினர். .

அதன்படி, கட்சிகளிலிருந்து அரசுக்கு ஆட்களை சேர்க்கும் வேலைத்திட்டம் ஒருபுறம் இருக்க, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை ஆட்சிக்கு கொண்டு வந்து அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் நடவடிக்கை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

ஆனால் அதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களது விருப்பமின்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.